Wednesday, March 22, 2006

கச்சேரிக்கு கூட்டமும், காணாமல் போன எஸ்.என்.ஜெ.வும்


எனது நண்பர் எஸ்.என்.ஜெ. ஒரு கர்நாடக இசை வல்லுநர். (ஆமாம், இவங்க எல்லாருமே மூணு எழுத்துல ஒரு பேர் வச்சுக்கராங்களே. அது ஏன்?) அவரிடம் பேசும்போது அடிக்கடி அவர் வருத்தப்படுவது கச்சேரிகளுக்கு இளைஞர்கள் வருவதேயில்லை, சரியான கூட்டம் இருப்பதில்லை என்பதுதான். நம்மைப் பற்றி தெரிந்தும் இப்படி சொல்லலாமோ? எடுத்துவிட்டேன் கூட்டம் சேர்க்கும் வழிகளை. இதோ வரேன்னு சொல்லிட்டு போனவர்தான். ஆளையே காணும். அப்படி என்னதான்யா சொன்னே என்று கேக்கறீங்களா. மேலே படியுங்கள். சாரி, கீழே படியுங்கள்

http://www.nilacharal.com/tamil/jokes/tamil_comedy_252.asp

4 comments:

இலவசக்கொத்தனார் said...

:) :)) :))) :)))) :)))))

சிறில் அலெக்ஸ் said...

போட்டுத் தாக்கு.

நல்ல (நகைச்)சுவை பட எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

G.Ragavan said...

ம்ம்ம்ம்...நல்ல ஐடியாக்கள் கொஞ்சம் கொடுத்திருக்கீங்க....

குறிப்பா பல பாடகர்கள் கலந்து பாடுறது....அப்புறம் நின்னுகிட்டு பாடுறது....அப்புறம் ரசிகர்களோட கலந்துரையாடிப் பாடுறது...இதெல்லாம் நல்ல ஐடியாக்கள்.

என்னையக் கேட்டா...இன்னைக்கு மக்களிடம் போறதுக்கு கருநாடகப் பாடகர்கள் தங்களை இன்னும் கொஞ்சம் புதுமை செஞ்சுக்கனும்.

அதெல்லாம் சரி...பிரியாணி பொட்டலம் வாங்கிக் குடுக்க வேண்டிய நிலையிலையா இருக்கு....ரெண்டு பிரியாணி வாங்கிக் குடுத்தாதான் நான் வருவேன். குலுக்கல் முறையில் பரிசு...அடடா! என்ன தம்பூராவும் கஞ்சீராவுமா?

பொன்ஸ்~~Poorna said...

எம். எஸ் ரெண்டு எழுத்து தானேங்க.. வேற ஏதுனாச்சும் ந்யூமராலஜி இருக்கலாம் :)

ஐடியா எல்லாம் நல்லா இருக்கு..
//இரு பாடல்களுக்கு இடையில் பேஷன் ஷோ.. //
அப்புறம் அந்த இரு பாடல்கள் பாடும் போதும் கேன்டீன்ல கூட்டம் முட்டும்.. இடைவேளை மாதிரி ஆகிடும்

கேட்பவர்களையும் பாடச் சொல்வது ரொம்ப புதுமையான யோசனை.. ஆனா, அப்புறம் க்ளாஸ் ரூம் மாதிரி ஆகிவிடாதா?!!! எங்க மிஸ் அடிக்கடி தனியாப் பாடச் சொல்றாங்கன்னு தான் நானே அந்தப் பக்கம் போகிறது இல்லை.. அப்புறம் கச்சேரிக்கு வரும் கூட்டமும் குறைஞ்சிடுமே