உலகமகா அறுவை தத்துவங்களின் தொகுப்பு...அடி விழாம் இருந்தா சரி:
1. பஸ்லே கலெக்டரே எறினாலும் முதல் ஸீட் என்னவோ கண்டக்டருக்குதான்.
2. உலகம் தெரியாம வளர்ந்தா அவன் வெகுளி - அதுவே கிரிகெட் தெரியாம வளர்ந்தா அவன் கங்குலி.
3. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ணலாம், ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா?
4. டிக்கெட் வாங்கி உள்ள போனா அது சினிமா ; உள்ளே போய் டிக்கெட் வாங்கினா அது ஆப்ரேஷன் தியேட்டர்...
5. சைகிள் காரியரில் டிபன் கொண்டு போகலாம் ஆனா டிபன் காரியரில் சைகிள் கொண்டு போக முடியாது.
6. ஆம்பிளைகளை கொண்டு போக ஆம்புலன்ஸ்...பொம்பளைகளை கொண்டு போக பொம்புலன்ஸ் கிடையாது...
7. புயலாலே கரையைக் கடக்க முடியும் ஆனா கரையாலே புயல கடக்க முடியுமா?
12 comments:
அட நல்ல இருக்குங்களே. இதைப்போட வேண்டிய இடங்களிலே போடரேன். அடிக்கடி எழுதுங்க. நம்ம பதிவிலேயும், குமரன் பதிவிலேயும் போட்ட விதிகளையெல்லாம் பின்பற்றி பல நூறு பின்னூட்டங்கள் வாங்க வாழ்த்துக்கள்.
உள்ளேன் ஐயா!
எனக்கு ஒரு சந்தேகம்? இனிமே ரீபஸ் எல்லாம் மஹா மோசத்துல தான் வருமா?(கொத்தனாரே! உங்களுக்கு ஆப்பு வைக்கலை. யதார்த்தமான கேள்வி தான்!)
:)))-
அடப்பாவிங்களா...அடிமடியிலேயே கைவக்கறீங்களே...நல்லா இருப்பீங்களா... அங்க வாங்க கவனிச்சுக்கரேன்.
கொத்தனாரே!
கூல் டவுன். பெரியவரு அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு. அதனால தானே அவரு பெரியவரு?
:))-
ஐயா பெரியவரே,
நெசமாலுமே அந்த மாதிரி எதுவும் பண்ணி வக்காதீங்க. குருவி உக்கார பனம்பழ விழுந்த கதையா எதோ நான் சொல்லித் தான் நீங்க பண்ணீங்கனு கொளுத்து நினைச்சுக்கப் போறாரு??
பஸ்லே கலெக்டரே எறினாலும் முதல் ஸீட் என்னவோ கண்டக்டருக்குதான்.
- அப்ப டிரைவருக்கு...?
அண்ணா,
கொத்தனாருக்கு மேலவும் இருப்பேள் போலிருக்கே!
பதில் போடறதெல்லாம் நமக்கு பழக்கமில்ல. தெரிஞ்ச பதில போடணுமான்னு அலுப்புதான். :)))
வருக! வளர்க! தொடர்க!
//இலவசக்கொத்தனார் said...
அட நல்ல இருக்குங்களே. இதைப்போட வேண்டிய இடங்களிலே போடரேன். அடிக்கடி எழுதுங்க. நம்ம பதிவிலேயும், குமரன் பதிவிலேயும் போட்ட விதிகளையெல்லாம் பின்பற்றி பல நூறு பின்னூட்டங்கள் வாங்க வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி கொத்தனாரே
//கைப்புள்ள said...
உள்ளேன் ஐயா!
எனக்கு ஒரு சந்தேகம்? இனிமே ரீபஸ் எல்லாம் மஹா மோசத்துல தான் வருமா?(கொத்தனாரே! உங்களுக்கு ஆப்பு வைக்கலை. யதார்த்தமான கேள்வி தான்!)//
அட, இந்த ஐடியா நல்லாத்தான் இருக்கு...ரொம்ப டான்க்ஸ்
//Dharumi said...
பஸ்லே கலெக்டரே எறினாலும் முதல் ஸீட் என்னவோ கண்டக்டருக்குதான்.
- அப்ப டிரைவருக்கு...? //
தருமி, நான் விதிமுறைகளை பின்பற்றி பஸ்ஸில் பின்னேறுபவன் (முன்னேறுபவனுக்கு எதிர்ப்பதம் மாதிரி இருக்கில்லே)..அதனாலே கண்டக்டர்...ஹி ஹி
//இராமநாதன் said...
அண்ணா,
கொத்தனாருக்கு மேலவும் இருப்பேள் போலிருக்கே!
பதில் போடறதெல்லாம் நமக்கு பழக்கமில்ல. தெரிஞ்ச பதில போடணுமான்னு அலுப்புதான். :)))
வருக! வளர்க! தொடர்க! //
இராமநாதன் ஸார், உங்க வருகைக்கு நன்றி. உங்க மாதிரி எழுதனமென்பது என் இலக்கு. ரொம்ப தள்ளி இருக்கிற மாதிரி தெரியுது. முயற்சி திருவினையாக்கும்....
//அட, இந்த ஐடியா நல்லாத்தான் இருக்கு...ரொம்ப டான்க்ஸ்//
கொத்தனாரே! எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல...பெரியவரு என்னை மாட்டி விடறாரு...நான் இல்லை.
Post a Comment