அது இல்லீங்கோ. சிவாஜி கணேசன், வஸந்தமாளிகை படத்தில் பாடும் "ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்" பாட்டில் வரும் "ஏன் ஏன் ஏன்" மாதிரியில்லை இது. மர்ஃபீஸ் லா என்று கேள்விப்பட்டிருப்பீர்களே, "ஏதேனுமொன்று தவறுமெனில் அது தவறியே தீரும்". வாழ்க்கையில் இந்த மர்ஃபீஸ் லா போன்றவை நம்மை பல முறை பாதித்திருக்குமே! கீழ் கண்டவைகள் ரொம்ப பரிச்சியமாக இருக்கோ?
1. ஒரே காரியத்திற்கு இரண்டு வரிசைகள் இருக்குமாயின், நாம் நிற்கும் வரிசை மட்டும் நத்தை போலூறுவது ஏன் ஏன் ஏன்?
2. கை எட்டாத இடத்திலேயே அதிகம் அரிப்பது ஏன் ஏன் ஏன்?
3. இடம்-வலம் காட்டும் கண்ணாடி, மேல்-கீழ் காட்டாதது ஏன் ஏன் ஏன்?
4. தொலைபேசியில் ராங் நம்பர்கள், என்கேஜ்டாகவே இருப்பதில்லையே ஏன் ஏன் ஏன்/
5. தவறாது தகராறு செய்யும் கார், மெக்கானிக் முன் நல்ல பிள்ளையாக் இருப்பது ஏன் ஏன் ஏன்?
6. ஒரு பெரிய சாவிக்கொத்தில், எப்போதும் கடைசியாக முயற்சி செய்யும் சாவியே பூட்டைத் திறப்பது ஏன் ஏன் ஏன்/
7. எந்த சாதனமும், க்யாரண்டி ப்ரீயட் முடிந்த மறுநாளே ரீப்பேராவது ஏன் ஏன் ஏன்?
8. இரண்டு இடத்திற்கு இடையேயுள்ள மிகவும் குறுக்கு வழி எப்பொதும் ரிப்பேராக இருப்பது ஏன் ஏன் ஏன்?
இது மாதிரி உங்களுக்கெதாவது தெரிந்தால், எடுத்து விடுங்களேன்...
17 comments:
ரன்வேயில் நமது பிளேன் நிற்கும்போது பக்கது ரன்வே பிளேங்கள் மட்டும் உடனே பறப்பதேன்?
ஹோட்டலில் நாம் ஆர்டர் பண்ணிய சாப்பாட்டை விட அடுத்தவர்கள் சாப்பாடு சுவையாக இருப்பதேன்?
1. நாம தேடிக்கிட்டிருக்கறபோது கிடைக்காத பொருள், வேண்டாத சமயத்தில் எப்போ பாத்தாலும் கண் முன்னாடி வந்து உறுத்துவது ஏன்?
2. முக்கியமான மாட்ச், ரேஸ் பார்க்கும் சமயத்தில், யாராவது விருந்தாளி வருவது ஏன்?
3. பரீட்சைக்கு எழுந்திருக்க வேண்டிய அன்று மட்டும் அலார்ம் க்ளாக் பேட்டரி அவுட் ஆவது ஏன்?
4. முக்கியமான கால் செய்யவேண்டிய நேரத்தில், மொபைல் போன் பேட்டரியோ, நெட்வர்க் சிக்னலோ இல்லாதிருப்பது ஏன்?
--
கொத்தனார்,
2. எப்படியா இதெல்லாம் கண்டுபிடிக்கறீங்க?
நம்ம படம் பாத்துட்டு சோகமா வரும் போது...பக்கத்து தியேட்டர்ல இருந்து மக்கள் சந்தோஷமா வருவது ஏன்?
வைத்தியரய்யா, நன்றி. அப்படி எடுத்து வுடுங்க....தூளா இருக்கு உங்க தத்துவங்கள்....
//
நம்ம படம் பாத்துட்டு சோகமா வரும் போது...பக்கத்து தியேட்டர்ல இருந்து மக்கள் சந்தோஷமா வருவது ஏன்?
//
இராகவன் ஸார், இது என்ன கஷ்டமா? எப்பவுமே பக்கத்து தியேட்டரிலேயே படம் பார்க்க வேண்டியதுதானே...ஹி ஹி ஹி
ஒரு சோதனை பின்னோட்டம். தமிழ்மணப்பட்டை வேலை பண்ணுதான்னு பாக்க....
யோவ் வைத்தியரே,
நான் சொன்னது நம்ம டேபிளிலேயே. அதனால் டேஸ்டுக்கு என்று சரிபாதியை உள்ளே தள்ளிட மாட்டோம்.
விட்டா டேபிள் டேபிளா போய் கையேந்த விட்டுடுவீர் போலிருக்கே. ஹூம்.
முக்கியமான வேளையாய் இருக்கும் போது (சரி மீட்டிங் போக வேண்டிய போதுன்னு சொல்லிக்கலாம்) இராமநாதன் சீரியஸ் மேட்டர் என்று பொய் சொல்லி கான்ஃபரென்ஸ் சாட் பண்ண கூப்பிடுவது ஏன் ஏன் ஏன்?
http://dxbfriend.blogspot.com/2006/02/blog-post_16.html
என்னைப்போலவே அல்லது நான் உங்களைப் போலவே போட்ட ஒரு பதிவு. பாருங்கள், இவைகளுக்கு உங்களால் விடையளிக்க முடிகிறதா என்று!
வீட்டுவேலை எக்கச் சக்கமா குவிஞ்சிருக்கறப்ப இப்படிப்பட்ட பதிவுகள் நம்மளை இழுக்கறது ஏன்????????
அய்யோ, பழைய பதிவுன்னு தெரிஞ்சும்கூட இப்பப்போய் இதுக்குப் பின்னூட்டம் போட்டது ஏன்?????????
// ஹோட்டலில் நாம் ஆர்டர் பண்ணிய சாப்பாட்டை விட அடுத்தவர்கள் சாப்பாடு சுவையாக இருப்பதேன்? //
ஆமாம், அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது இலவசம் ?
:-)))
பேரூந்து, ரயில்வே கிராசிங் ப்க்கம் போறப்ப கேட் மூடுவதேன்?
அங்கடியை விட்டுத் தள்ளிதான் கார் நிறுத்த முடிகிறது ஏன்?
அன்புடன்
சாம்
//// ஹோட்டலில் நாம் ஆர்டர் பண்ணிய சாப்பாட்டை விட அடுத்தவர்கள் சாப்பாடு சுவையாக இருப்பதேன்? //
ஆமாம், அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது இலவசம் ?
:-)))
//
இவருக்கு மட்டும் இப்படிக் கேட்கத் தோன்றியது ஏன்?
(இந்தக் கேள்விக்கே எனக்கு வயிறு நோகுமளவிற்கு சிரிப்பு வந்தது ஏன்? ஏன்? ஏன்?)
கைப்புள்ளக்கு மட்டும் ஆப்பு கூட்டமாய்க்(குரூப்பாய்க்)கிளம்புவது ஏன்? ஏன்? ஏன்?
(இதன் நகல்: http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
நல்லா எழுதிருக்கிறதா நினைக்கும் பதிவுக்கு இல்லாமல் சொத்தை பதிவுக்கு நிறைய பின்னூட்டம் வருதே ஏன்?
"சினிமா தியேட்டரில் இடைவேளையின் போது செல்லும்போது, எனக்கு முன்னாடி இருப்பவன் மட்டும் குடம் குடமாகப் போய்க் கொண்டிருப்பது ஏன்?."
சுஜாதா எழுதியது என்று நினக்கின்றேன்.
Post a Comment