Thursday, February 23, 2006

தாயுமானவரும் ஹாலிவுட்டும்

கீழே இருப்பது தாயுமானவரின் பாடல்.
'தேஜோமயானந்தம்' என்ற ஒரு கருத்தின் கீழுள்ள பல பாடல்களிலொன்று.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;
கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு
சரீரத்தி ன்ம்புகுதலாம்;
சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்;
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது; சத்தாகியென்சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தெசோ மயானனந்தமே
- தாயுமானவர் (கிபி 1608 - 1662)

குதிரை, மதயானையை வசமா நடத்தலாம்.கரடி வெண்புலி வாயையும் கட்டலாம். ஒரு சிங்கத்தின்மேலேறி உட்கார்ந்து கொள்ளலாம். பாம்பை (கட்செவி) ஆட்டுதல் கூடும். நெருப்பில் பாதரசம் (இரதம்) இட்டு ஐந்து உலேகங்களையும் பொன்னாக்கி விற்று உண்ணலாம். வேற யாரும் கண்டுக்காமே உலகத்திலே உலா வரலாம். தேவர்களை (விண்ணவர்களை) வேலை வாங்கலாம். சதாகாலமும் இளமையோட இருக்கலாம். வேறொரு உடலில் புகுந்து கொள்ளலாம். நீரின் (சலம் - ஜலம்) மேல் நடக்கலாம். நெருப்பின் (கனன் - கனல்) மேல் தங்கி இருக்கலாம். தமக்கும் மேலான பிற சித்திகளைப் பெறலாம்.

ஆனா, மிக்க கடினம் யாதெனில் (இங்கதான் ஒரு போடு போடறார், தாயுமானவர்) "மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது". உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே, தேசோமயானந்தமே....

சும்மா பொத்திகினு இருக்கிறது ரொம்ப ரொம்ப கட்டம்ங்கிறாரு. இந்த ஒரு விஷயம் அந்த காலத்திலிருந்தே ஒரு கஷ்டமான காரியமாகத்தான் இருந்திருக்கு.

17ம் நூற்றாண்டிலேயே தாயுமானவர் சொன்னதையெல்லாம் இப்போ ஹாலிவுட்லே ஃபிலிம் காட்டிக்கினு இருக்காங்க. ஸ்டார் ட்ரெக், தி பிக் (big), இன்விஸிபிள் மான் அப்பிடின்னு கலாய்க்கிறானுங்க அவங்க.....

தாயுமானவருக்கு ஏதாவது ராயல்டி கொடுத்தானுங்களா?

13 comments:

இலவசக்கொத்தனார் said...

நான் அடிக்கடி சொல்லற ஒரு ஜோக் :

There is only one thing I cannot resist and that is Temptation

இதைத்தான் இப்படி சொல்லறார் போல இருக்கு.

Unknown said...

ஆமாம், இலவசம், ஆமாம். இந்த விஷயம் மட்டும் மாறவேயில்லை...யுகங்களாக...

G.Ragavan said...

ஆகா! கெளம்பீட்டீங்களா! ஆனா உண்மையத்தான் சொல்லீருக்கீங்க...

// சும்மா பொத்திகினு இருக்கிறது ரொம்ப ரொம்ப கட்டம்ங்கிறாரு. இந்த ஒரு விஷயம் அந்த காலத்திலிருந்தே ஒரு கஷ்டமான காரியமாகத்தான் இருந்திருக்கு. //

பின்னே நம்மள்ளாம் அறிவாளிகள். சீறிய சிந்தனையாளர்கள். நல்லவர்கள். நாலும் தெரிந்தவர்கள். சும்மா இருக்க முடியுமா? அடுத்தவனைத் திருத்த வேண்டாமா!

சும்மா இருன்னு ஒருத்தர்க்கிட்ட இன்னொருத்தர் சொன்னாரு. அப்படி இருந்ததால அவருக்குப் பெருமைதான் வந்தது. அருணகிரியத்தான் சொல்றேன். சும்மா இருன்னதும் இருந்தாரே....அடடா! அதான் அவங்கள்ளாம் தெய்வம்.

Unknown said...

//பின்னே நம்மள்ளாம் அறிவாளிகள். சீறிய சிந்தனையாளர்கள். நல்லவர்கள். நாலும் தெரிந்தவர்கள். சும்மா இருக்க முடியுமா? அடுத்தவனைத் திருத்த வேண்டாமா//

இதுக்கு பெயர்தான் paradox. பொத்திகினு இருக்கிறதுதான் நல்லது என்று எப்படி சொல்லமுடியும் சும்மா பொத்திக்கினு இருந்தால்?... ரொம்ப நன்ற் இராகவன் உங்கள் வருகைக்கு...

rv said...

அருமையான தத்துவப்பாடல். (ஓவரா கடி புதிர் போட்டு விளையாடினதாலேயோ?)

அதற்கு அழகாகவும் பொருள் சொல்லியிருக்கீறீர்கள்.

//சும்மா பொத்திகினு இருக்கிறது ரொம்ப ரொம்ப கட்டம்ங்கிறாரு. இந்த ஒரு விஷயம் அந்த காலத்திலிருந்தே ஒரு கஷ்டமான காரியமாகத்தான் இருந்திருக்கு.
//
ஹூம். இதெல்லாம் நடக்கிற காரியமா? அதுவும் நம்மள மாதிரி தஞ்சாவூர் ஆட்களுக்கு எதையாவது (யாரையாவது) வாய்ல போட்டு மெல்லலேனா தூக்கமே வராதே!

Unknown said...

//ஹூம். இதெல்லாம் நடக்கிற காரியமா? அதுவும் நம்மள மாதிரி தஞ்சாவூர் ஆட்களுக்கு எதையாவது (யாரையாவது) வாய்ல போட்டு மெல்லலேனா தூக்கமே வராதே! //

தஞ்சாவூர் சரி, திருநெல்வேலி மட்டும் என்ன வாழுதாம்? எம்ட்டன்கள்.

இலவசக்கொத்தனார் said...

வைத்தியரே,

//அருமையான தத்துவப்பாடல். (ஓவரா கடி புதிர் போட்டு விளையாடினதாலேயோ?)//

இதென்ன வம்பு? இப்போ நானும் இந்த மாதிரி பரிகாரமெல்லாம் தேடணுமா. இதெல்லாம் நமக்கு வராதேய்யா. கொஞ்சம் நம்ம பேருல எழுதிக் குடுங்களேன்.

Unknown said...

//இதென்ன வம்பு? இப்போ நானும் இந்த மாதிரி பரிகாரமெல்லாம் தேடணுமா. இதெல்லாம் நமக்கு வராதேய்யா. கொஞ்சம் நம்ம பேருல எழுதிக் குடுங்களேன். //

கொஞ்சம் பொருங்க இலவசம். எனக்கு எழுதிக் கொடுத்தவர் உங்களுக்கும் எழுதித் தருவாரன்னு கேட்டு சொல்லறேன்...

இலவசக்கொத்தனார் said...

ஆகா,
இப்போ மண்டபத்திலே இதெல்லாம் நிஜமாவே எழுதிக் குடுக்கறாங்களா.
சொக்கா...

மாயவரத்தான் said...

About this post in today's dinamalar...

http://www.dinamalar.com/2006Feb28/flash.asp

In Thenkoodu webportal...

http://www.thenkoodu.com

Unknown said...

மாயவரத்தான் அவர்களே, மிக்க நன்றி இந்த தினமலர் லிங்க் தந்தமைக்கு...

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள் அய்யா.

குமரன் (Kumaran) said...

அடடடடடடடாடா...வந்து ரெண்டு நாளுல தினமலர்ல பெயர் வந்தாச்சா? 'தினமலருக்கு நன்றி'ன்னு ஒரு பதிவு உடனடியாகப் போடவும். நீங்கள் தாமதம் செய்தால் நானோ இராகவனோ இலவசமோ இராமனாதனோ யாராவது போட்டு புண்ணியம் தேடிக் கொள்வோம். சொல்லிட்டேன்.