ஏதோ கம்முன்னு இருந்த நம்மை இந்த விளையாட்டுக்கு இழுத்துவிட்டவரு இந்த கொத்தனார் . ஒரே டென்சன் பார்ட்டி இந்த ஆளு. நம்மளை வேற வழிகாட்டி, டிராஃபிக் சிக்னல்-ன்னுட்டு என்னலாமே சொல்லி வேற விட்டாரு. வேற வழியே இல்லை. எதாவது ஒளறிக் கொட்டியே தீரணம். பகவான் விட்ட வழி.
நானிருந்த நாலு ஊர்கள்:
1. திருநெல்வேலி:
பிறந்தது வண்ணாரபேட்டேல. உயர் நிலைப்பள்ளி படித்தது ஹிந்து காலேஜ் ஹைஸ்கூல்லே. தாமிரபரணிலே திருட்டு குளி, சினிமா பாக்க வைத்திருந்த பைசாவே மூணு கார்ட்லே தொலைத்தது, பொது நூலகத்தில் பொன்னியின் செல்வன் படித்தது, தரை டிக்கெட்லே படம் பார்த்தது எல்லாம் இங்கதான். நாங்க இருந்த மாளிகை மாதிரி இருந்த மனை இப்போ ஒரு மருத்துவமனை!!
2. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்:
கல்லூரி வாழ்க்கையுடன் துவக்கம் மெட்ராஸ் (இப்போதான்யா சென்னை). தமிழ் மீடியத்தில் படித்தவன் சரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொண்ட இடம். முட்டை சாப்பிட, பீர் அடிக்க, திருட்டு சினிமா பார்க்க என்று கும்மாளமடித்த இடம்.
3. பம்பாய், இப்போதய மும்பய்:
ஏர் இந்தியாவில் வேலை கிடைத்தவுடன் ஒரு பொட்டியோடு வந்து, Paying guest accommodationல் வெங்கிடசாமியுடன் தங்கி, திருமணம் என்ற ஒரு ஆயுள் தண்டனை பெற்ற இடம் (வெங்கிடசாமியுடன் அல்ல ஸார்). முதல் இரண்டு வருடங்கள் பிடிக்காத, இப்போது பிரிய மனமில்லாத ஒரு அற்புத நகரம்.
4. பஹ்ரைன் (Bahrain):
பம்பாயில் வீடு வாங்கப் போய், தலைநிறைய கடன் வந்து, அதை தீர்ப்பதற்காக வேலை பார்க்க வந்த இடம். அரேபிய நாடுகளில் மிகவும் முற்போக்கான எண்ணம் கொண்ட இடமிது (1984ம் ஆண்டு). ஓரு சின்ன கிருட்டிணர் கோவிலுமுண்டு. நண்பர்கள் நிறைய கிடைத்த ஒரு இடம்.
செல்ல விரும்பும் நாலு இடங்கள்:
1. எகிப்து:
இந்நாட்டு சரித்திரம், பிரமிடுகள். ஸ்பின்க்ஸ், நைல் நதி எல்லாமே ஒருவரை பிரமிக்க வைக்கும். கூடிய சீக்கிரமே செல்வேன்.
2. கீரிஸ் (Greece):
இதுவும் சரித்திரப்புகழுக்காகவே.
3. இமயமலைப் பகுதிகள்:
புகைப்படத்திலும், நேஷ்னல் ஜியாக்ரஃபிக் சானலிலும் மட்டும் பார்த்தது. வயசானவர்கள் எல்லாம் போகக்கூடாது என்று சொல்வதற்குள் போய் வரணம்.
4. வெஸ்ட் இண்டீஸ்:
சிறந்த கடற்கரைகளும், அது சார்ந்த மிகச் சுவாரஸ்யமான விஷயங்களும் ;-)
பிடித்த நாலு காரியங்கள்:
1. குழந்தைகளுடன் (குறிப்பாக ஊணமுற்றவர்கள்) விளையாடுவது. Amazing way for relaxing.
2. இசை நன்கு தெரிந்தவர்களுடன் அளவளாவுதல்.
3. புதுப்புது பதார்த்தங்களை சமைத்து அதை அடுத்தவர்களை சாப்பிட வைத்து பார்ப்பது.
4. சனி, ஞாயிறுகளில், மதிய உணவிற்கு பிறகு போடும் ஒரு அமர்க்களமான தூக்கமும் அதன் பின் பருகும் ஒரு லோட்டா காப்பியும்.
பிடித்த நான்கு உணவு அயிட்டங்கள்:
1. சீஸ், (மஷ்ரூம் என்று ஆங்கிலத்தில் மருவப்படும்) நாய்க்கொடை போட்ட எந்த பதார்த்தமும்.
2. பெங்களூரிளுள்ள “Cosmo Village” என்ற இடத்தில் கிடைக்கும் fusion ஐயிட்டங்கள் (e.g. spicy thai curry with kerala parathas).
3. தயிர்சாதம் ஊறுகாயுடன்.
4. சுக்கு காப்பி (திருநெல்வேலி சங்க்சன் பெருமாள் கோவிலிலுள்ள அய்யர் கடையில் அமர்க்களமாக இருக்கும்)
நமக்கு பிடித்த நாலு கலைஞர்கள்:
1. டி.எம்.கிருஷ்ணா:
மிகச்சிறந்த இளம் கர்னாடக இசைக்கலைங்கர். எல்லாவற்றிக்கும் மேலாக, ஒரு நல்ல நண்பர், மனிதர்.
2.: மறைந்த எம் டி இராமநாதன்:
பிரமிக்க வைக்கும் திறன்கள் கொண்ட, எங்கேயோ இருக்க வேண்டிய, அதிர்ஷ்டம் அதிகமில்லாத, அற்புத கர்னாடக இசைப் பாடகர்.
3. எம் எஸ் விஸ்வநாதன்:
ஐம்பது வருடங்களாயினும், எல்லா பிரிவு மக்களையும் கவரும் பாடல்களை படைத்த ஒரு இசை மேதை.
4. Of course, கமலஹாஸன்:
எம் டி இராமநாதன் of தமிழ் திரையுலகம். எதைச் செய்தாலும் “அட” என்று சொல்ல வைப்பவர்.
பிடிக்காத நாலு அயிட்டங்கள்:
1. அடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் வண்டி ஓட்டும் ஓட்டுனர்கள். In general, our Indian traffic.
2. வள வளவென்று வாய்மூடாமல் சுயபுராணம் பேசும் ப்ரகஸ்பதிகள்.
3. சென்னை ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள்.
4. முன்னில் புகழ்ந்து, பின்னால் குறை கூறுவோர்.
அழைக்க விரும்பும் நால்வர்:
(இந்த விளையாட்டுக்கு புச்சும்மா.. நாலு பேர் கிடைப்பாங்களா என்பது சந்தேகமே….)
1. கௌசிகன்
இவர் கொத்தனார் சொன்ன பிறகும் போடலை. அதனாலே மறுபடியும்.
2. கைப்புள்ள
எதோ நம்ம பதிவுலே ஒரு பிண்ணோட்டம் போட்டார் என்ற நன்றிக்காக
3. நிலா
இவர் நடத்துகிற விளையாட்டில் நம்மையும் சேர்த்திட்டார். அதனாலே ஹி ஹி ஹி.
4. Jayashree
நம்மளையும் நம்ம புதிர்களையும் மதிச்சு, அப்புதிர்களை விடுவித்ததற்காக
அவ்ளவுதான் சாமியோய்…..நம்மளை விட்டுடுங்கோ அய்யாமார்களே, அம்மாமார்களே…
10 comments:
அட! நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா! அதுலயும் ஒரு சந்தோஷந்தான்.
நல்ல அறிமுகங்கள். ஜங்சன் பக்கத்துல சிந்துபூந்துறைலதான் என்னோட நண்பன் வீடு இருந்தது. அங்க நீங்க சொல்ற கடைலதான் சுக்குத்தண்ணி குடிச்சேன்னு நெனைக்கிறேன். பல மறக்க முடியாத காரணங்களால் திருநெல்வேலி எனக்கும் பிடித்த ஊர்.
அதே போல எம்.எஸ்.விஸ்வநாதனை எனக்கும் மிகவும் பிடிக்கும். மிகச்சிறந்த கலைஞர். அவர் காலத்தில் குமார் போன்ற இசையமைப்பாளர்களிடமும் பாடியிருக்கிறார். இளையராஜா, கங்கை அமரன், ஏ.வி.ரமணன், தேவா என்று எல்லாரிடமும் பாடி விட்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானிடமும் பாடியிருக்கிறார். அத்தனை பேரிடமும் நல்ல நட்பையும் பெயரையும் சம்பாதித்து வைத்திருக்கும் இசை மேதை.
அட,
இந்த மூணு சீட்டு விவகாரமெல்லாம் சொல்லவே இல்லையே. இப்போதான் வெளிய வருது. நீங்க சொன்ன ஊருக்கெல்லாம் போகும் போது மறக்காம ஒரு டிக்கெட் அனுப்புங்க.
//3. புதுப்புது பதார்த்தங்களை சமைத்து அதை அடுத்தவர்களை சாப்பிட வைத்து பார்ப்பது.//
இது உமக்கு பிடிக்கும் ஆனா சாப்பிடாறவங்களுக்கு? :)
மீண்டும் வருவேன்.
இராகவன்ஜீ (மரியாதை பெயரிலேயே ஒட்டிகினுகீதப்பா), தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எல்லாம் கொத்தனார் கொடுத்த "pin selling"தான்.
அய்யா இலவசம், ஏதோ பின்னூட்டம் போடுதேன்னு, கருப்பு அஞ்சல் பண்ற மாதிரி படுதே, என்னவே?
அப்பூ, அதென்ன 'Pin Selling'. நான் முன்னே செல்லத்தானே ஆசைப் படுகிறேன். சரியாச் சொல்லுங்க. மத்தவங்க தப்பா நினைக்க போறாங்க.
கருப்பு அஞ்சலா? நாங்களெல்லாம் கருப்பு தங்கமய்யா. நேருக்கு நேர் பேசுவோமே தவிர இந்த மாதிரி வேலையெல்லாம் கிடையாது. ஆனா பழுத்த மரத்துக்குதானே கல்லடி. :)
//அப்பூ, அதென்ன 'Pin Selling'. நான் முன்னே செல்லத்தானே ஆசைப் படுகிறேன். சரியாச் சொல்லுங்க. மத்தவங்க தப்பா நினைக்க போறாங்க. //
அதெல்லாம் இராகவன் ஸாருக்கு நல்லாவே புரியுமப்பூ...
"pin selling" = ஊக்கு விக்குறது அய்யா....
பெரியவரே!
என்னையும் நீங்க நாலு பை நாலு ஆட்டம் வெளயாடக் கூப்பிட்டத நான் இப்ப தான் பாத்தேன். அதுக்கு மொதல்ல நம்ம நன்னி. நீங்க கூப்பிட்டத தெரியாமலேயே நான் நான்மணிக்கடிகை எழுதியிருக்கேன்.
ஒரு பின்னூட்டம் போட்டதுக்கே என்னைய கூப்ட்ட ஒங்களுக்கு உண்மையிலேயே பெரிய மனசு தான்.
அட! நீங்கள் நம்ம ஆளு. ம்டிஆர் ரசிகனா. தேடிகிட்டுஇருந்தேன் ஐய்யா! இனி விடமாட்டேன்.இப்பவே ம்டிஆர் சஹானா கேட்டா மதிரி இருக்கு.
Post a Comment