“பதிவிட்ட பொழுதிற் பெரிதுவக்கும் தன் ப்ளாகை
தினமல ரச்சில் கண்ட நாள்”….
என்று மதிலின் மேலேறி வாய்விட்டு இவ்வுலகறிய கூவ ஆசைதான். ஆனால் நம் தன்னடக்கம் தடுக்கின்றதே :-). ப்ளாக் உலகிற்கு வந்து முழுசாக ஒரு மாதமாகவில்லை, உருப்படியாக ஒரு நாலு பதிவு கூட போடவில்லை, இவனுக்கு வந்த பவிசைப் பார் என்று எதிர்கட்சியினரில் சிலர் முணுமுணுப்பது காதில் விழாமலில்லை.
எது எவ்வாரிருப்பினும், ஒரு நல்ல பதிவைத் தேடிப்பிடித்து (இது எப்படி இருக்கு) தங்களது 28 பிப்ரவரி 2006 தினமலரில் அச்சிட்டமைக்கு எனது மனமுவந்த நன்றி… ஒரு பெரிய “ஓ”வும் கூட, தினமலருக்கு…
தினமல ரச்சில் கண்ட நாள்”….
என்று மதிலின் மேலேறி வாய்விட்டு இவ்வுலகறிய கூவ ஆசைதான். ஆனால் நம் தன்னடக்கம் தடுக்கின்றதே :-). ப்ளாக் உலகிற்கு வந்து முழுசாக ஒரு மாதமாகவில்லை, உருப்படியாக ஒரு நாலு பதிவு கூட போடவில்லை, இவனுக்கு வந்த பவிசைப் பார் என்று எதிர்கட்சியினரில் சிலர் முணுமுணுப்பது காதில் விழாமலில்லை.
எது எவ்வாரிருப்பினும், ஒரு நல்ல பதிவைத் தேடிப்பிடித்து (இது எப்படி இருக்கு) தங்களது 28 பிப்ரவரி 2006 தினமலரில் அச்சிட்டமைக்கு எனது மனமுவந்த நன்றி… ஒரு பெரிய “ஓ”வும் கூட, தினமலருக்கு…
13 comments:
ஆகா! வாழ்த்துகள் ஹரியண்ணா. இதுதான திறமை. வந்ததுமே வெற்றி உங்களைத் தேடி வந்திருக்கிறது.
பூப்பறிக்க வருகிறோமில் வந்திருக்க வேண்டிய வெற்றி ஒரு நாள் தள்ளி வந்திருக்கிறது. அவ்வளவுதான்.
வாழ்த்துகள் ஹரிஹரன்ஸ்.
எந்த எதிர்கட்சியைச் சொல்றீங்க? நிலா வைத்தத் தேர்தல் தான் முடிஞ்சாச்சே.....
ஜி இராகவன் தம்பி அவர்களே, மிக்க நன்றி. எல்லாம் தம் போன்ற நல்லோர்களின் நல்லெண்ணம்தான் காரணம்....
//எந்த எதிர்கட்சியைச் சொல்றீங்க? நிலா வைத்தத் தேர்தல் தான் முடிஞ்சாச்சே..... //
தேர்தல்கள் முடிவுற்றினும் எதிர் கட்சிகள் எதிர் கட்சிகளே...எங்காவது எதிர் கட்சிகள் இணைந்து இருக்கிறதா, தேர்தலுக்குப் பிறகு?
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அய்யா.
ஆரம்பமே இந்த கலக்கலா? அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?
எங்க ரூல்ஸ் படி பாட்டு, கவிதை எல்லாம் போட்டா விளக்கமும் கொடுக்கணும். இது உங்களை மாதிரி பாட்டுக்கு விளக்கம் சொல்லற ஆசாமிங்களுக்கு கம்பல்ஸரி.
ஏங்க குமரன், நீங்கதானே இதுக்கு இன் சார்ஜ். கேட்க மாட்டீங்களா?
யாருங்க அது எதிர்கட்சி? என்ன முணுமுணுப்பு? சட்டசபையை விட்டு வெளியேத்தணுமா?
ஆட்சிக்கு வந்த பின் நாங்க எல்லாரையும் அரவணைத்துதான் செல்வோம். அதனால நீங்க சொல்லறவங்க நாங்க இல்லை.
பாட்டு கவிதையா? அட ஆமாம். கவனிக்கலை. குறள் மாதிரி என்னமோ ஒன்னு இருக்கு. சட்டசபை விதிகளின் படி ஹரிஹரன்ஸ் பாட்டுக்கு விளக்கம் தரவேண்டும்.
//எங்க ரூல்ஸ் படி பாட்டு, கவிதை எல்லாம் போட்டா விளக்கமும் கொடுக்கணும்//
இதை பாட்டு, கவிதையென்று சொன்ன உங்க மாதிரியான மகானுபாவுலுக்களுக்கு அடியேனுடய வந்தனங்கள்...இதுக்கு பெயர்தான் வஞ்சப்புகழ்ச்சியணியோ?
நான் எங்கே பாட்டு கவிதைன்னு சொன்னேன். ஏதோ குறள் மாதிரி இருக்கேன்னு சொன்னேன். ஒரு வேளை கொத்ஸ் வஞ்சப் புகழ்ச்சி செய்யறாரோ என்னவோ? நீங்க தானே அவருக்கு வழிகாட்டி. பாம்பின் கால் பாம்பறியும்.
எங்களை பொறுத்த வரையில் அது உடைக்கப் பட்ட உரைநடையாக இருந்தால் கூட விளக்கம் சொல்ல வேண்டும். இதில் வஞ்சமும் இல்லை, புகழ்ச்சியும் இல்லை.
சட்டசபை விதி சொல்கிறது. அதானால் கேட்கிறோம்.
//இலவசக்கொத்தனார் said...
யாருங்க அது எதிர்கட்சி? என்ன முணுமுணுப்பு? சட்டசபையை விட்டு வெளியேத்தணுமா? ஆட்சிக்கு வந்த பின் நாங்க எல்லாரையும் அரவணைத்துதான் செல்வோம். அதனால நீங்க சொல்லறவங்க நாங்க இல்லை.
//
ஆஹா, என்னவொரு அரவணைப்பு...புளகாங்கிதமடைந்தேன்ய்யா...புளகாங்கிதம்
bale.. bale...
Post a Comment