கையைத் தூக்குங்க, நீங்க எம்புட்டு பேருய்யா தின்னவேலி (திருநெல்வேலி) ஆளுங்க? சினிமால்லாம் பாப்பீயளா? அப்போ உங்களுக்கு கட்டாயமா ஜங்சன்லே இருக்கிற பாலஸ்டிவேல்ஸ் தெரிஞ்சிருக்குமே.
Palace D'Wales அப்பிடிங்கிற ரெண்டு வார்த்தை கொஞசம் கொஞசமா மருவி பாலஸ்டிவேல்ஸ்ன்னு ஆயிடுச்சு. எங்க ஆளுங்க அதை Paalas-tee-vels அப்பிடின்னு செல்லமா ஒரே வார்த்தையாச் சொல்லுவாங்க. அந்தக் கால அழுக்கான, இருட்டான தியேட்டர். பொதுவா ரெண்டு ஷோதான் போடுவான், சாயந்திரம் 6:30 மணி, ராத்திரி 9:30 மணி. சில சமயம் புதுப்படம் ஏதாவது ரீலிஸ்ன்னா மதியம் 2:00 மணி ஷோவுமிருக்கும், ஒரு கருநீலகலர் படுதாவ போட்டு இருட்டு பண்ணி ஃபிலிம் காட்டுவான்.
செங்கோட்டை, திருச்செந்தூர் போற இரண்டு இரயில் தண்டவாளங்களை தொட்டமாதிரி இருக்கும் இந்த தியேட்டர். படம் நடக்கும்போது, இரயில் விசில், இரயில் போகும் கடகடா சத்தங்கள் இலவச இணைப்புகள். ராவுலே, தட்டாகுடித்தெரு வீட்டு திண்ணைலே உக்காந்தா நைட்ஷோ வசனமெல்லாம் நல்லா கேக்கும்.
1965ம் வருஷ விவஹாரம் இது. தரை டிக்கெட் (31 பைசா) , பெஞ்சு டிக்கெட் (66 பைசா), சேர் டிக்கெட் (1ரூ 6 பைசா), ஸோஃபா டிக்கெட் (1ரூ 66 பைசா). டிக்கெட் விலையெல்லாம் வரி சேத்துதான். தரை டிக்கெட் வாங்கினா, பெயருக்கேத்தமாருதி, தரையிலேதான் உக்காரணோம். ஆத்து மண் போட்டிருப்பான். அதை குமிச்சி குமிச்சி அதுமேலே ஒக்காந்திருப்பாங்க. துப்பல்கள், குழந்தைகளின் ஒண்ணுக்கு, இரண்டுக்கு எல்லாம் சர்வ சாதரணமா எல்லா இடத்திலுமிருக்கும். பீடி குடிச்சு பிகிலடித்தவாறே படம் பாப்பாக மக்களெல்லோரும். அந்தக் காலத்திலே எங்கிட்டு வேணா பீடி சிகரெட்டு எல்லாம் பிடிக்கலாமில்லே. இப்போ மாதிரியில்லை. கிட்டமணியய்யர் மாதிரி பெரிய வீட்டு ஆளுங்களெல்லாம் எப்பவுமே ஸோஃபா டிக்கெட்லேதான் படம் பாப்பாக.
அங்கே கிடைக்கும் சில சுவாரசியமான அயிட்டங்கள்: அவிச்ச கடலை, அச்சு முருக்கு, கோலி சோடா, இஞ்சி மொரபா, கடலை முட்டாய் வகையறா. என்ன விலைன்னு ஞாபகமில்லை. பீச்சாங்கை அழுக்கு கட்டவிரல அந்த கோலிலே வச்சு, வலது கையாலே ஒரு அடி அடிச்சு அத தொறக்குறதே ஒரு தனி கலை. எல்லாருக்கும் சுளுவா வந்துடாது. கோலி சோடா குடிக்கத்தெரியாம சட்டையெல்லாம் தொப்பமா நனைச்சது நல்லா நினைவிருக்கு.
ஒரு படம் ரீலிஸ்ன்னா ஒரே கொண்டாட்டம்தான். ஒரு ரெட்ட மாட்டு வண்டிலே ரெண்டு பக்கத்திலும் தட்டி மாட்டி அதுலே கலர் போஸ்டர் ஒட்டியிருப்பாக. ரண்டன் டக்ககுன ரண்டன் டக்குனன்னு மோளம் அடிச்சு ஒரு ரோஸ் கலர் பேப்பர்லே அடிச்ச நோட்டீஸ் கொடுத்துகிட்டே ரோடு ரோடா போவாக. அந்த நோட்டீஸ் வாங்க ஒரே அடிதடிதான். எங்க அப்பா அப்படியே கைய நீட்டி ஒரு நோட்டீஸ் வாங்கி கொடுத்தவுடன் அதை மத்த சேக்காளிககிட்டே காமிச்சி பீத்தின நாட்கள் எத்தனையோ. எங்க வீட்டு பிள்ளை ரிலீஸுக்கு கலர் நோட்டீஸ். அந்த எம்ஜீயார் சாட்டை அடிக்கிற மாதிரி போஸ் கொடுத்த படத்தை கட் பண்ணி என் பீரோவிலே ஒட்டி மார்தட்டி பெருமை கொண்ட அழகே தனிதான்.
இதெல்லாம் நெனச்சா, "நெல்லை நகரில் யாம் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ"ன்னு பாடத்தான் தோணுது!!!
52 comments:
நானெல்லாம் திருநவேலி போய் படம் பாக்கும்போது இது டப்பா தியேட்டர். புது படமெல்லாம் வராது. சோ நோ கோயிங்.
ஆமா இது என்ன மலரும் நினைனுகள் சீசனா?
என்ன பண்ண...இந்த வாரம் மலரும் நினைவுகள் வாரம்... :-)
எனக்கெல்லாம் விவரம் தெரிந்த நாள்களிலே ஒரு பாழடைந்த கட்டிடம்தான் கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. மேம்பாலத்தை கடக்கும் போது பாழடைந்து கிடந்த அந்த கட்டிடத்திற்கு அருமையான பிளாஷ்பேக். இப்போது அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டது என நினைக்கிறேன்.
நல்ல பதிவு. இன்னும் பல மலரும் நினைவுகளை எதிர் பார்க்கிறேன்
-- விக்னேஷ்
திருநெல்வேலி நான் அடிக்கடி போயிருக்கும் ஊர். நண்பர்களின் ஊர். நெருங்கிய நண்பனின் ஊர். ஆனால் திரைப்படம் என்று ஒன்றுதான் பார்த்திருக்கிறேன். அது அருணகிரி தியேட்டரி. படம் டூயட். அது எனக்கு நினைவகலா நட்பு நிகழ்வுகள்.
நானும் திருநெல்வேலிதான் மக்கா..
அந்தப் பெயரை கேள்விப்பட்டிருக்கின்றேன்... நல்ல மலரும் நினைவுகள்பா..கலக்குங்க..?
வாங்க விக்னேஷ். நான் சொல்லறதெல்லாம் 40-50 வருஷத்துக்கு முன்னாடியுள்ளது. டிக்கெட் 31 பைசான்னா பாத்துக்கோங்களேன்.
//வாங்க விக்னேஷ். நான் சொல்லறதெல்லாம் 40-50 வருஷத்துக்கு முன்னாடியுள்ளது.//
சோக்காப் பேரு வச்சாருங்க கொத்தனாரு ஒங்களுக்கு!
:)-
// நிலவு நண்பன் said...
நானும் திருநெல்வேலிதான் மக்கா..//
வணக்கம்...இன்னுமொரு நெல்லை அன்பரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி உங்கள் பின்னோட்டத்திற்கு.
// G.Ragavan said...
....அது அருணகிரி தியேட்டரி. படம் டூயட். அது எனக்கு நினைவகலா நட்பு நிகழ்வுகள்.//
நீங்க இந்தக் காலத்து ஆளுங்கோ...இப்படி ஒரு தியேட்டரே அப்போ கிடையாது...
கைப்புள்ள said...
சோக்காப் பேரு வச்சாருங்க கொத்தனாரு ஒங்களுக்கு!
:)-
ஐயா கைப்புள்ள, என் பதிவுக்கு பின்னோட்டம் பொடுவீகன்னு பாத்தா, இப்படி பொட்டுன்னு பொடதிலே போட்டியளே ஒரு போடு.
நியாயமா இது? அடுக்குமா? நீதியா? தருமமா?
அய்யா ஜனங்களே, நீங்களே முறை சொல்லுங்க.
யோவ் கைப்பு,
அதுதான் உன் பதிவுல நான் மூளைக்காரன்னு ஒத்துக்கிட்டையே. அப்புறம் நான் சொன்னா சரியாத்தானே இருக்கும்.
//நியாயமா இது? அடுக்குமா? நீதியா? தருமமா?
அய்யா ஜனங்களே, நீங்களே முறை சொல்லுங்க. //
ஐயா! தயவு செஞ்சு தப்பா எடுத்துக்காதீங்க! ஒரு தமாசுக்குத் தான் சொன்னேன்.
//கைப்புள்ள said...
ஐயா! தயவு செஞ்சு தப்பா எடுத்துக்காதீங்க! ஒரு தமாசுக்குத் தான் சொன்னேன். //
கைப்புள்ளே, நிலாக்கா மாதிரி ஸ்மைலி போட மறந்திட்டேன்...தப்பாவே எடுத்துக்கலே.
//நிலாக்கா மாதிரி //
நீங்க கொத்தனார விட மூளைக்காரருங்க!!!
:)))-
என்னுடைய அப்பா, 1942 ஆம் ஆண்டு இங்கே சிவ கவி பார்க்க தன் சித்தப்பாவுடன் வந்ததாக
சொல்லியிருக்கிறார். அப்பொழுது அவருக்கு வயது ஒன்பது இருக்கும். அவரது ஊர் அம்பை.
அன்புடன்
சாம்
////நிலாக்கா மாதிரி //
மக்கா,
உங்களுக்கெல்லாம் நம்மள வம்புக்கு இழுக்கலன்னா தூக்கம் வரமாட்டேங்குதுல்ல? :-)))
வயசானா அப்பிடித்தான், பாவம் என்ன செய்ய முடியும்? :-)))
//40-50 வருஷத்துக்கு முன்னாடியுள்ளது//
வணக்கம்னா....இந்த தியேட்டர் கேள்விப் பட்டிருக்கேன் ஆனா போனது கிடையாது.
ராயல், அருணகிரி, பேரின்பவிலாஸ், செல்வம் இங்கெல்லாம் தான் (சரஸ்வதி நோ நோ :-(
நிலாக்கா, எப்போதான் இந்த பின்னோட்டத்திற்கு பின்னோட்டம் போடறதுக்கு ஸ்டாப் கொடுப்பீங்க?
பதிவுக்குத்தான் பின்னோட்டத்தை போடம்மா?
பிஸிதான் நீங்க, இருந்தாலும் கொஞ்சம் கருணை காட்டலாம், கைப்புள்ள மாதிரி நக்கலா ஒரு போடு போடாம. நன்றி தாயே.
வாங்க டுபுக்கு. இங்கே போகாமலிருந்ததே நல்லது. அந்த மூட்டைப்பூச்சி தொல்லையை யார் தாங்கறது?
//Sam said...
என்னுடைய அப்பா, 1942 ஆம் ஆண்டு இங்கே சிவ கவி பார்க்க தன் சித்தப்பாவுடன் வந்ததாக
சொல்லியிருக்கிறார். அப்பொழுது அவருக்கு வயது ஒன்பது இருக்கும். அவரது ஊர் அம்பை.
அன்புடன்
சாம் //
சாம், நமக்கு ஊரு அம்பை பக்கந்தேன். ரொம்ப சந்தோசமுங்க.
ஏங்க ஹரிஹரன்,
இந்த தியேட்டருக்கு இரண்டாம் ஆட்டம் பாக்கப் போனா, அப்படியே அங்க ராத்திரி தூக்கம் போட்டுட்டு, காலைல எழுந்திருச்சி ரயிலு, பஸ் பிடிக்கலாமே...அதச் சொல்லலை!
எல்லாத்துக்கும் வணக்கம்,
நமக்கும் நெல்லைதான்கிறேன்..... தின்னவேலில ரண்டுவருஷம் தான் இருந்தேன்.அட அந்த தியேட்டர் நான் கேள்விப்பட்டதேயில்லையே.. நம்ம அந்த அளவு சுத்தமாட்டம்லா....அடுத்த தடவ போவும் போது, கேட்டுபுடுறேன்... இப்ப இருக்கிறது, அம்பை பக்கம்ம்ம்ம்ம்ம் விக்கிரமசிங்கபுரம். கேள்விபட்ருப்பியனு நெனைக்கிறேன்.
Hi,
very happy to hear those old things... eventhough i have not been to that theatre my dad told abt that.."pals-d veles 'il bala nagamma" this was the famous quote he told..(they used to sing like this and walk till the theatre.. anntha kallathulathan bus facility ellam kidaiyathe)..
When ever i am crossing the flyover i will see that theatre. u can see the rates of the different classes from the flyover itself...
Muthu Shunmugam
Hi,
very happy to hear those old things... eventhough i have not been to that theatre my dad told abt that. (Nan intha kaalathu aal pa) "pals-d veles 'il bala nagamma" this was the famous quote he told..(they used to sing like this and walk till the theatre.. anntha kallathulathan bus facility ellam kidaiyathe)..
When ever i am crossing the flyover i will see that theatre. u can see the rates of the different classes from the flyover itself...
Muthu Shunmugam
// தமிழ் தாசன் said...
தின்னவேலில ரண்டுவருஷம் தான் இருந்தேன்.அட அந்த தியேட்டர் நான் கேள்விப்பட்டதேயில்லையே.. நம்ம அந்த அளவு சுத்தமாட்டம்லா....அடுத்த தடவ போவும் போது, கேட்டுபுடுறேன்... இப்ப இருக்கிறது, அம்பை பக்கம்ம்ம்ம்ம்ம் விக்கிரமசிங்கபுரம். கேள்விபட்ருப்பியனு நெனைக்கிறேன்//
வாங்க தமிழ் தாசன் அவர்களே. ஜங்க்ஷன்லேந்து டவுணை பாத்து போகும் போது ஒரு லெவல் க்ராசிங் வரும்லே. அதை தாண்டினா எடது கைப்பக்கம் இருக்கு இந்த டாக்கீஸ். எங்கே, மதுரா கோட்ஸ்லே வேலையோ?
// Dharumi said...
ஏங்க ஹரிஹரன்,
இந்த தியேட்டருக்கு இரண்டாம் ஆட்டம் பாக்கப் போனா, அப்படியே அங்க ராத்திரி தூக்கம் போட்டுட்டு, காலைல எழுந்திருச்சி ரயிலு, பஸ் பிடிக்கலாமே...அதச் சொல்லலை//
ஆமாம், இதை எப்படி விட்டுட்டேன்? ஞாபக படுத்தினதற்கு நன்றி ஐயா.
நன்றி, கௌசிகன். உயர்ந்தமனிதன் படப் பாட்டுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே. இந்த நாள் அன்று போலின்பமாயில்லயே அது ஏன் ஏன் ஏன் நண்பனே?"
நன்றி, முத்து ஷண்முகம், உங்கள் பின்னோட்டதிற்கு. எல்லோருக்குமே ஏதாவதொரு இனிய ஞாபகம் இருக்கத்தான் செய்கிறது அந்த சினிமா கொட்டாய் பத்தி பேசும் போது...
//நல்ல பதிவு. இன்னும் பல மலரும் நினைவுகளை எதிர் பார்க்கிறேன்
-- விக்னேஷ் //
உங்கள் உற்சாகத்திற்கு நன்றி விக்னேஷ். என்னால் முடிந்த வரை எழுதுகிறேன்.
பாலஸ் டிவேல்ஸில் நிறைய பழைய படங்கள் பார்த்திருக்கிறேன். இரவு முழுவதும் மேம்பாலத்தடியிலும் சூர்யா டீ ஸ்டாலில் டீ குடித்துவிட்டும் "உலக" விவகாரங்களையெல்லாம் விவாதித்து விட்டு காலை 4.00 மணி பஸ்சில் ஊருக்குப் போனது பல நாட்களில் நடந்த நிகழ்ச்சி..
//ராம்கி said...
பாலஸ் டிவேல்ஸில் நிறைய பழைய படங்கள் பார்த்திருக்கிறேன். ..... விவாதித்து விட்டு காலை 4.00 மணி பஸ்சில் ஊருக்குப் போனது பல நாட்களில் நடந்த நிகழ்ச்சி//
தங்கள் வருகைக்கு நன்றி. எந்த ஊரு ஸார் உங்களுக்கு? பத்தமடையா? சும்மா ஒரு ஊகம்தான்.
ஆஹா... வாருமைய்யா வாரும்.
தரை டிக்கெட்டு, டண்டணக்கு மாட்டுவண்டி நோட்டீஸ் எல்லாம் சொன்னப்பவே லேசாப் புரிஞ்சுபோச்சு,
நம்ம கூட்டத்து ஆளுன்னு.
அதுசரி, எப்படா இவ ஊருக்குப் போவான்னு பாத்து உள்ளெ வந்தாப்புலே இருக்கு:-)))))
ஆமாம், அட்டகாசமான பதிவுகளைப் போட்டுக்கிட்டு பேரை மட்டும் மஹாமோசமுன்னு வச்சுக்கிட்டீங்க?
ஆனாலும் நீங்க ரொம்பவே மோசம்.
'இந்தக் கிழங்களுக்கு வேற வேலை இல்லை, எப்பப்பார்த்தாலும் மலரும் நினைவுகள்'னு ஒரு கூட்டம்
புலம்புதுங்கோ:-))))
//'இந்தக் கிழங்களுக்கு வேற வேலை இல்லை, எப்பப்பார்த்தாலும் மலரும் நினைவுகள்'னு ஒரு கூட்டம்
புலம்புதுங்கோ:-))))//
ஆமாங்கோ. இப்படியெல்லாம் சொல்ல வச்சு 50, 100ன்னு பின்னூட்டம் வேற வாங்கறாங்கோ. இது ஆனாலும் அநியாயம்கோ. இருந்தாலும் நம்ம பதிவுக்கு வந்து உள்ளேன் ஐயா போடறதுனால சும்மா விடலாங்கோ.
சரியாங்கோ? :)
வருக வருக துளசி அவர்களே. மேஸ்திரி - சித்தாள் அந்த மாதிரி யாரோ உங்களை "பின்னோட்ட இளவரசி"ன்னு சொன்னாங்க. இப்போ புரியுது ஏன்னுட்டு... :-)
//ஜங்க்ஷன்லேந்து டவுணை பாத்து போகும் போது ஒரு லெவல் க்ராசிங் வரும்லே. அதை தாண்டினா எடது கைப்பக்கம் இருக்கு இந்த டாக்கீஸ். //
அடுத்த் தடவ கண்டிப்பா பாத்துபுடுறேன்....
//எங்கே, மதுரா கோட்ஸ்லே வேலையோ? //
இப்ப வேலை பெங்களூரிலங்க ....அதாங்க கம்பியூட்டர் வேலை...
சொந்த ஊரு தான் தின்னவேலி........
பாலஸ்டிவேல்சில் படம் பார்துள்ள ஒரு சிலரில் நானும் ஒருவன். அவங்கிட்டதான் ஊர்ல இருக்கதுலேயே நல்ல மெஷின்(அதான் ப்ரொஜெக்டர்) உண்டுன்னு கேள்வி.
ரோசாவசந்த், தங்கள் பின்னோட்டத்திற்கு நன்றி
நான் தின்னவேலி பக்கமே வந்ததில்லை. ஆனா பதிவையும் பின்னூட்டங்களையும் படிக்க நல்லா இருக்கு. :-)
அட! நீங்களும் எங்க ஊரா? கல்லூரி விடுதியிலிருந்து அடிச்சுப் பிடிச்சு வந்தும் ரிலீஸ் படங்களுக்கு டிக்கெட் கிடைக்காதபோது அடைக்கலம் தருவது பாலஸ் தான். 80 களில் பழைய எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்துவிட்டு லேட்டாக ஹாஸ்டல் போய் வாட்ச்மேன் கதவு திறக்க மறுத்த நாட்களையெல்லாம் தூசி தட்டி விட்டீர்களே!!
அட !! எல்லாருடைய மலரும் நினைவுகளும் படிக்க சுகமாக இருக்கிறது.
நன்றி, பாரதி. வயசு ஆக ஆக இந்த ஞாபகங்கள் ரொம்பவே வருதுங்க.
ஆமாம் "சாப்பிட்டு விட்டுன்னு" மொட்டையா விட்டுடீங்க, அதுக்கப்புறமா என்ன நடந்திச்சு? ஹிஹிஹி
டாங்ஸ்ங்கோ, குமரன். நம்மூரு பக்கந்தான் வந்து பாரும்வே, நல்லாவே இருக்கும்ங்கேம்லா...
தாங்ஸ், தாணு. அந்த நாள் ஞாபகத்தின் சுகமே அலாதியானதுதான்..
உங்க வருகைக்கு நன்றி, ஜெயஸ்ரீ. அடிக்கடி வந்து போங்க.
rosavasanth சொல்வது உண்மை. அந்த கட்டத்தில் (ராயல் தவிர மீதி டுபுக்கு சொன்ன தியேட்டர்லாம் அப்ப கெடையாது) அவர்களுடைய ப்ரொஜெக்டர் போல் குவாலிட்டி வேறு எங்கும் கிடையாது. பண்டிகை நாட்களில் மற்ற புதிய (பட) தியேட்டர்கள் "ஹவுஸ் ஃபுல்" ஆகி டிக்கட் கிடைக்காத போது வெறுங்கையுடன் வீடு திரும்பக்கூடாது என்ற பிடிவாத கொள்கையினால் இங்கு டிக்கட் எடுத்து படம் பார்த்ததுண்டு. நேராக இந்த தியேட்டருக்கே வந்தும் பார்த்திருக்கிறேன் (கல்யாண ராமன் & நினைத்தாலே இனிக்கும் 2 வது ரிலீஸ், ஒளவையார்...மற்றும் நிறைய பழைய படங்கள்..). சிறிது காலத்துக்கு பின் தரை டிக்கட்டுக்கு உட்கார சிமின்ட் பென்ச் போட்டார்கள். நான் படம் பார்க்கும் போது (1975 and above) டிக்கட் விலை தரை 40 காசு, பென்ச் 50 காசு.
Good recall Hariharans
அட! நம்ம ஊரு ஆளுங்க இவ்வளவு பேரு இருக்கியளா..!! ரொம்ப சந்தோஷமா இருக்குது....
நான் தினமும் தமிழ்மணத்துக்கு வருவேன்...ஆனா எப்பவாவது தான் பின்னூட்டம் விட்றது...(ஒன்னுமில்ல.. சோம்பேறித்தனந்தான்...!!)
திருநவேலி.... இந்த வார்த்தைய யாராவது சொன்னா போதும்...!! மனசுக்குள்ள ஒரு இனம் புரியாத உணர்வு வந்துடும்....
சின்ன வயசில எங்க ஊரு வி.கே.புரத்தில இருந்து திருநெவேலிக்கு வர்றதுன்னா... சந்தோஷம் தாங்க முடியாது...!!
ஆடிக்கழிவு-ல துணி எடுக்க வரும் போது வீட்டுல என்னயும் கூட்டிட்டு வருவாங்க... அப்புறம் திருச்செந்தூருக்கு சஷ்டிக்கு போகும்போது வருவோம்..
திருநெவேலி ன்னா உடனே ஞாபகத்துக்கு வர்றது சினிமா தான்... என்ன படம் பார்க்கலாம்னு யோசிச்சுகிட்டே தான் பாரிஜாதம் பஸ்ல ஜன்னலோரத்துல உக்காந்துட்டு வருவேன்..
நாம் நினைக்கிற படத்துக்கு எங்க கூட்டிட்டு போவாங்க...!! டவுண்-ல ஜவுளி எடுத்து முடிக்கிறதுக்குள்ள நேரமாயிடும்...! உடனே பக்கத்துல இருக்கிற ராயல் தியேட்டருக்குத்தான் கூட்டிட்டுப்போவாங்க... இல்லேன்னா ஜங்சன் - ல இருக்கவெ இருக்கு பூர்ணகலா....
மத்த தியேட்டருக்கெல்லாம்... நுழைவுத்தேர்வுப்பயிற்சிக்கு தினமும் வந்துட்டு போகும் போதுதான் போக ஆரம்பிச்சது..!!
என்னதான் சொல்லுங்க... forum-ல படம் பார்த்தா என்ன... IMAX-ல படம் பார்த்தா என்ன......
இப்பவும் திருநெவேலிக்கு வந்து... நண்பர்கள பார்த்துட்டு...அப்புறமா பர்ஸ்டு ஷோ.. படம் பார்த்துட்டு... ரயில்வே ஸ்டேஷன் போற வழியில இருக்கிற ப்ளாட்பாரக்கடையில..
சூடா இட்லி சாப்ட்டு.. பஸ்ஸ புடிச்சு... பொதிகை மல காத்த ஜன்னலோரமா உக்காந்து வாங்கிக்கிட்டு.. நைட்டு பன்னிரெண்டு மணிக்கு ஊரு வந்து சேர்றதே தனி சுகந்தாங்க...!!
யப்பா சாமி,
எப்படிப்பா இப்படி அரதபழசான பதிவுக்கெல்லாம் உயிர் குடுக்கறீங்க? ரொம்ப நாள் ஆச்சு - புது பதிவு போட்டும், நம்ம பக்கம் வந்தும். கொஞ்சம் பாருங்கப்பா.
அது சரி 50 வாங்கினாத்தான் அடுத்த பதிவுன்னு ஒரு விரதமா? சொல்லியிருந்தா ஆவன செஞ்சு இருப்போமில்ல?
இந்தா பிடியுங்க 50. இனிமேலாவது அடுத்த பதிவு போடுங்க. :)
இப்ப பாலஸ் ட் வேல்ஸ் தியேட்ட்ர்ல நம்ம பண்டார விளை நாடார் கட்டு போடுதாருல்லா. எங்கப்பா சொல்லி இருக்காப்ல, அந்த தியேட்டர் பத்தி. இன்னைக்கு ஊர்ல நல்ல தியேட்டர்னா பாம்பே தியேட்டர் தான். மேம்பாலம் கட்டினதால தான் தியேட்டர மூடிட்டதா சொல்லுவாங்க. அப்டியா??
ஒரு பாலஸ்டிவேல்ஸ்ஸ வச்சு, 50-க்கு மேலே பின்னூட்டம் வாங்கிட்டான்ல, நம்மூர்க்காரன் கலக்குறாம்ல..
Nellai siva, Singai siva.. in vk puram ( Vikrmasingapuram), sannathistreet if nay one calls the name SIVA.. then atleat 4-5 perosns may react to that.. we have may siva's there ( both male and female)
hope you may aware this just ot share with you..
Post a Comment