பிடிங்க பதிலை.
முதற்கண், உற்சாகமாக கலந்து கொண்ட எல்லாருக்கும் மனமுவந்த நன்றிகள் உரித்தாகுக.
எல்லா பதிலுக்கும் சரியாக பதில் சொன்ன சுரேஷுக்கு பரிசு வழங்குமாறு நிலாக்கா அவர்களைக் கேட்டு கொள்கிறேன். இன்னும் இம்மாதிரி புதிர்கள் தேவைதானான்னு சொன்னா நல்லா இருக்கும்....
1. பெண் ஸ்பின் பௌலரோட பெயர் என்னவோ? - "பால திரிபுர சுந்தரி"
2. கோகுலாஷ்டமிக்கும் கம்யூனிஸமுக்கும் என்ன ஒற்றுமையோ? - "கால் மார்க்ஸ்"
3. ஈக்கள் எப்படி communicate பன்னும்? - "ஈ-மெயில்"
4. ஷார்ட் சர்க்யூட்டுக்கும் பொறாமைக்கும் என்ன ஒற்றுமையோ? - "வயர் (wire) எரியும்"
5. சண்டை வந்தா யாரு ஜெயிப்பாங்க? மந்தவெளியா, மைலாப்பூரா? - "மைலாப்பூர், என்னா அங்கேதான் டாங்க் இருக்கு"
6. துபாய் போஸ்ட் ஆஃபிஸ்லே ஸ்டாம்ப் வாங்கிட்டு உடனே எல்லாரும் வெளிலே ஏன் போறாங்க? - "வெளியிலே ஒட்ட-கம் இருப்பதாலே"
7. ஒரு அரேபிய ஷேக் டானிக் வாங்கிட்டு குடிக்கவே இல்லை, ஏன்? - "Shake well before use ன்னு பாட்டிலில் எழுதி இருந்தது".
8. அந்த பொண்ணுக்கு என்ன வாசனை பிடிக்கும்? - "சீனி-வாசனை"
9. மழை மேகம் – இதற்கு எதிர் பதம் என்ன? - "மழை மே நாட் கம்"
10. Areaக்கு எதிர் பதம் என்ன? - "எறங்குய்யா"
11. தோசைலே ஏன் ஒட்டை ஒட்டையா இருக்கு? - "சுடறதனாலே"
12. எந்த மிருகத்துக்கு மதம் பிடிக்கும்? - "யானைக்குத்தான்"
11 comments:
விடைகளப் போட்டாச்சு. நமக்குதான் எல்லாம் தெரியுமே. அதான் விடைகளப் போடலை. மத்தவங்க எல்லாரும் நான் எல்லாக் கேள்விக்கும் சரி வாங்கீருக்கிறதப் பாத்தா விடையே போடாமப் போயிருவாங்களோன்னுதான் நான் பேசாம இருந்தேன். :-)
//எல்லா பதிலுக்கும் சரியாக பதில் சொன்ன சுரேஷுக்கு பரிசு வழங்குமாறு நிலாக்கா அவர்களைக் கேட்டு கொள்கிறேன்//
என்னதிது? உட்டா தகதக தங்கெவேட்டைக்கே நம்ம ஸ்பான்ஸர்ஷிப் கேப்பீங்க போல்ருக்கு:-)))
அதுசரி, உங்களுக்கும் நான் அக்காவா? போற போக்கைப் பாத்தா என் பேரே நிலாக்கான்னு மக்கள் தப்பா நினைச்சிக்கப் போறாங்கய்யா:- )
வாங்க, இராகவன் அண்ணா (நிலாக்கான்னா நீங்க?)...வரலையேன்னு பாத்தேன். இப்பத்தான் தெரியுது.
//அதுசரி, உங்களுக்கும் நான் அக்காவா? போற போக்கைப் பாத்தா என் பேரே நிலாக்கான்னு மக்கள் தப்பா நினைச்சிக்கப் போறாங்கய்யா:- ) //
அம்மா என்ற பெயர் எந்த லெவலில் இருக்கோ, அந்த அளவுக்கு அக்காவையும் கொண்டாந்துருவோம்ல..
அப்பாடா, உங்க ஸ்மைலியைப் பர்ர்த்தேனோ, மனசு நிம்மதி ஆச்சோ.. :-)
//அம்மா என்ற பெயர் எந்த லெவலில் இருக்கோ, அந்த அளவுக்கு அக்காவையும் கொண்டாந்துருவோம்ல..//
அப்ப நமக்கும் தொண்டர் படையெல்லாம் இருக்குன்னு சொல்லுங்க:-))
(இப்ப தூக்கத்தில கூட பின்னூட்டம் போடறமோ இல்லையோ ஸ்மைலி போட்றது)
//(இப்ப தூக்கத்தில கூட பின்னூட்டம் போடறமோ இல்லையோ ஸ்மைலி போட்றது)//
ஒரு தடவை போடாம விட்டது எங்க கொண்டு போய் விட்டிருச்சி. பாத்தீங்களா?
// வாங்க, இராகவன் அண்ணா (நிலாக்கான்னா நீங்க?)...வரலையேன்னு பாத்தேன். இப்பத்தான் தெரியுது. //
என்னது அண்ணாவா......கன்னா..பின்னான்னு பேசுறீங்களே! என்னானு நெனைக்கிறது?
G.Ragavan said...
//என்னது அண்ணாவா......கன்னா..பின்னான்னு பேசுறீங்களே! என்னானு நெனைக்கிறது? //
இது மரியாதையினால் வரும் அண்ணாங்க...நம்க்கு கன்னான்னா, ராஜேஷ் கன்னா மட்டும்தான் தெரியும்..ஹிஹி
சரி சரி, நிலா (அக்கா)வுக்கும், ஹரிஹரன்ஸுக்கும் சண்டையிலே எனக்கு கிடைக்க வேண்டிய பரிசை மறந்துடாதீங்க. (சாண்ட்ரோ Xing தானே பரிசு?)
// சுரேஷ் (penathal Suresh) said...
சரி சரி, நிலா (அக்கா)வுக்கும், ஹரிஹரன்ஸுக்கும் சண்டையிலே எனக்கு கிடைக்க வேண்டிய பரிசை மறந்துடாதீங்க. (சாண்ட்ரோ Xing தானே பரிசு?) //
இதுவும் நியாயமாதான் படுது. நிலா, நீங்க இ-புத்தகம் மாதிரி ஒரு இ-கார் கொடுத்துடுங்களேன்...ஹி ஹி
//நிலா, நீங்க இ-புத்தகம் மாதிரி ஒரு இ-கார் கொடுத்துடுங்களேன்...ஹி ஹி//
அப்டிப் போடுங்க. ஐடியா ஐயாசாமியா இருக்கீங்களே...
கொத்ஸ், நம்ம 4வது பாயின்டுக்கு இந்த ஐடியா வொர்க் அவுட்டாகுமான்னு பாருங்க... (ஞாபகம் இருக்குல்ல .. 50- 50)
Post a Comment